பாரீஸ்:
ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சர்கோஸி மறுத்தார். இதனை ஏற்காத நீதிமன்றம், பிரசாரத்தின் போது அதிகப் பணம் செலவு செய்யப்பட்டது சர்கோஸிக்கு தெரிந்திருந்தது. ஆனால், அவர் கண்டு கொள்ளவில்லை எனக்கூறியது.
இந்த வழக்கில் நீதிமன்றம், சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.