திருக்கழுக்குன்றம்

ள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி எனத் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகின்றது.  அவ்வகையில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் புதுப்பட்டினத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்துள்ளது.  இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துக் கொண்டுள்ளார்.

திண்டுக்கல் லியோனி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய போது தமது உரையில்,

“கட்சி நிர்வாகிகள் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற டுபட வேண்டும்.

தமிழக முதல்வரின் திட்டங்கள் குறிப்பாக, மகளிருக்கு இலவச பேருந்து  பயணம், பெட்ரோல் விலை ₹3, பால் விலை ₹3 குறைப்பு, கோயில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, கோயில் நிலங்கள் மீட்பு, மக்களைத் தேடி மருத்துவம், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்படப் பல திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஆகவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி”

எனத் தெரிவித்துள்ளார்.