சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு இனி வீட்டுத்தனிமை கிடையாது, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்திப்சிங் பேட்டி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி காணப்படுகிறது.தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 26,58,923 ஆக உள்ளது. நேற்று 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனது, சென்னையில் 186 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் பலியாகி விட்டனர். தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 58 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் தொற்றுபரவல் ஏற்ற இறக்கத்திற்கு காரணமா, மக்கள் கூட்டமே என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர், வீட்டு தனிமையில் இல்லாமல், ஹாயாக வெளியே சுற்றுவதால், மற்றவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், ஒரு தெருவில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது சென்னை முழுவதும் 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன. இருந்தாலும் தொற்று பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை.
இநத நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பஆலோசனை நடத்தினார். இதையடுத்து, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் அவர்கள் 14 நாட்கள் வரை தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதாக கூறும் நோயாளிகளின் வீட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வந்துஆய்வு செய்து, அதற்கான வசதிகள் இருந்தால் மட்டுமே, வீட்டு தனிமைக்கு அனுமதி வழங்கப்படும்.
வீட்டு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.
இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.