சென்னை: தமிழ்நாடு முழுவதும 115 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் ஆய்வில், ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை வணிகவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் உயர்அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது,
தமிழ்நாடு முழுவதும் வரி ஏய்ப்பு தொடர்பாக 115 இடங்களில் ஆய்வு மற்றும் ரெய்டு நடத்தப்பட்டது. இநத் பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார். இந்த ஆய்வு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. பல இடங்களில் பொருட்களை வாங்கி, மக்களிடம் விற்கும்போது உள்ளீட்டு வரியை அரசுக்குசெலுத்தாமல் வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆய்வுல் அரசுக்குசெலுத்த வேண்டிய வரி ரூ.101.49கோடி வரை ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.