சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், அப்போது தீவிரமடைந்திருந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை, ஆக்சிஜன் இருப்பு, தடுப்பூசி குறித்து கேட்டறிந்து, தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டார். இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.

இந்த நிலையில், நாளை (28ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள்  சேலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்.

28ம் தேதி சேலத்தில் மாலை பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்துகிறார். தொடர்ந்து 29ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் மற்றும் ஒக்கேனக்கல் மழைநீர் வடிநீர் திட்டத்தை பார்வையிடுகிறார்.