
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவர் கேயார்.
கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா காலமானார். அவரது வயது 67. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel