சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஏ.டி.ஜி.பி-க்கள் டி.ஜி.பி பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் உள்துறைசெயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1990 ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகளான தமிழகத்தில் பணியாற்றும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 5 காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்படுகிறார்கள். அதன்படி,
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவரும் கூடுதல் டி.ஜி.பி-யாக உள்ள ஏ.கே. விஸ்வநாதன்,
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ் குமார்,
அயல் பணியில் உள்ள ரவிச்சந்திரன்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால்
ஆகிய 5 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
5 அதிகாரிகள் டி.ஜி.பி-யாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி-க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.