பெங்களூரு
இன்று கர்நாடகாவில் 789 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,71,833 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,706 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,050 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,20,792 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,44,490 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை 14,118 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,450 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,16,837 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,535 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.