செப்டம்பர் 21-2001. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழ்நாட்டின் முதல்வராக அப்போது இருந்த ஜெயலிதாவின் பதவியை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக அதிரடி தீர்ப்பு வழங்கியதும், அதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, முதல்வராக அறிவித்து, அவர் முதன்முதலாக முதலமைச்சராக பதவி ஏற்றதும் இன்றைய நாளே.
1991-1996ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா, வருமானத்தை மீறி ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். ஆனால், அவர் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவரும், அவரது தோழியும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுமட்டுமின்றி, அரசு சொத்துக்களை (டான்சி) வளைத்து போட்டது, வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம், சசிகலாவுடன் சேர்ந்து கும்பமேளாவில் ஆடம்பர குளியல், ரவுடிகள் அராஜகம் என பல காரணங்கள் இந்த பின்னணியில் இருந்தன. இதனால் அவரது ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.