சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த சிறுவர்களை ஸ்டான் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னையில் குறைந்த விலையிலான குளிர்பானங்கள், அதாவது ரூ.10க்கு ஏராளமான லோக்கல் தயாரிப்பு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த குளிர்பானங்களுக்கு எந்தவொரு தரச்சான்றிதழும் கிடையாது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பதும் கிடையாது. இதனால் புற்றீசல் போல ஏராளமான குளிர்பான நிறுவனங்கள் நடமாடுகின்றன.
இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாநகரப் பேருந்தில் ஓட்டுந;ர செந்திலின் மகன் லஷ்மன் சாய் அருகிலிருந்த உறவுக்காரர் சிறுவன் ஓமேஸ்வரன் உடன் இணைந்து விளையாடி இருக்கிறான். அப்போது அருகே இருந்த மளிகை கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்திருக்கிறார்கள்.
சிறிது நேரம் கழித்து, அந்த சிறுவர்கள் இரண்டு பேரும் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர கிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை வேளச்சேரியில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த சிறுமி அண்மையில் உயிர் இழுந்திருக்கும் நிலையில் அந்த குளிர்பான ஆலை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் இதுபோல ஏராளமான குளிர்பான ஆலைகள் நடைபெற்று வருகின்றன. அதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் குளிர்பானம் குடித்த சிறுவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் ஒரு பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த சிறுவர்கள் மயங்கி விழுந்து ரத்த வாந்தி எடுத்து சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு போலி குளிர்பான ஆலைகளை மூடி சீல் வைத்து, சிறுவர்களின் உயிர்களை காப்பாற்றுமா?