சென்னை

மிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து எ கே  ராஜன் குழு அளித்துள்ள அறிக்கையை இன்று தமிழக ர்சு வெளியிட்டுள்ளது.

நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் மருர்ஹ்ஹ்டுவக் கல்லூரியில் சேர கண்ட  கனவு கானல் நீர் ஆனது.  ஒரு சில மாணவர்கள் இதையொட்டி தற்கொலை செய்துக் கொண்டனர்.  ஏராளமானோர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை உள்ளது.

கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.  தமிழக அரசு நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவைக் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அமைத்து உத்தரவிட்டது. ஒரு மாதத்தில் அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் நீட் தேர்வு தொடர்பாகப் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது.

தமிழகம் முழுவதும் இந்த குழுவிடம் 86 ஆயிரம் பேர் கருத்துகளை பதிவு செய்தனர்.  ஏ கே ராஜன் குழு பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு அறிக்கையைத் தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.  இன்று  நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”தமிழகத்தில் நீட் தேர்வுகள் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.  தவிர அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நியாயமானதாக இருக்காது.

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வுக்குப் பின் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது.  அதே வேளையில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது. தமிழக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கலாம்.

இந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியைப் பெறலாம்.  இவ்வாறு நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.