மாஸ்கோ
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12,000 மாணவர்கள் படித்து வரும் பல்கலைக்கழகத்தில்  துப்பாக்கிச் சூட்டின் போது சுமார் 3,000 பேர் இருந்துள்ளனர். பெர்ம் நகரில் உள்ள இந்த பல்கலைக்கழகம்  மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  சுமார் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்,  ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குண்டுகளைச் சுட வடிவமைக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இத்தகைய ஆயுதங்களை,  துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் படி  மாற்றியமைக்கலாம். துப்பாக்கி ஏந்திய நபர் சட்டப்பூர்வமாக ஆயுதத்தை வைத்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் காயமடைந்ததாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  19 புல்லட் காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,  மற்றவர்கள் எப்படிக் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் இதுகுறித்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது.
மே மாதம், கசான் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.