டில்லி

ந்தியாவில் நேற்று 31,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,34,47,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,121 அதிகரித்து மொத்தம் 3,34,47,010 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 308 அதிகரித்து மொத்தம் 4,44,869 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,633 பேர் குணமாகி  இதுவரை 3,26,64,351 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,24,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,391 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,18,502 ஆகி உள்ளது  நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,469 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,841 பேர் குணமடைந்து மொத்தம் 63,28,561 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,919 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,325 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,88,813 ஆகி உள்ளது.  இதில் நேற்று 143 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,439 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,266 பேர் குணமடைந்து மொத்தம் 42,93,963 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,80,888 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,67,083 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,587 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,080 பேர் குணமடைந்து மொத்தம் 29,13,713 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,775 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,43,683 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,310 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,581 பேர் குணமடைந்து மொத்தம் 25,91,480 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,37,353 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,061 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,309 பேர் குணமடைந்து மொத்தம் 20,08,639 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.