மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி , கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக நடித்த நடிகர் ரகுமான் , வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த கார்த்தி தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்றுவந்த இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ள படக்குழு, முதல் பாகம் 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.-