கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் நகர மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சேகர். இவர் பல மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாக பள்ளிச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணித ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , கணித ஆசிரியர் சேகரை இன்று கைது செய்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.