ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் நாய் சேகர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பவித்ரா லக்ஷ்மி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது.

‘நாய்சேகர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘நாய்சேகர்’ என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.