
விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா தட்டா-வுடன் ஐந்து கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்,
நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்துக்காக 4 வருடம் வளர்த்த முடியை, நடிகர் அர்ஜுமன் ஒரு காட்சிக்காக வெட்டி உள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் முடியை வெட்டி உள்ளனர். வெட்டப்பட்ட முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜுமன்.