சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் இன்று 202 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்னனர். அதிகபட்ச பாதிப்பு கோவையில் பதிவாகி உள்ளது. கோயமுத்தூரில்  206 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2வது இடத்தில் சென்னையும், 3வது இடத்தில் 135 பேர் பாதிப்புடன் 3வது இடத்திலும், 134 பேருடன் ஈரோடு நான்காவது இடத்திலும், 110 பேருடன் திருப்பூர் 5வது இடத்திலும், 108 பேர் பாதிப்புடன் தஞ்சாவூர் 6வது இடத்திலும் உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் தகவலினப்டி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,693 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,40,361 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,271 ஆக அதிகரித்துள்ளது. 25,88,334 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 16,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சென்னையில் இன்று 202 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,70,76 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 8,444 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 53,67,68 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 1864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 12
செங்கல்பட்டு 135
சென்னை 202
கோவை 206
கடலூர் 39
தர்மபுரி 33
திண்டுக்கல் 13
ஈரோடு 134
கல்லக்குறிச்சி 38
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 20
கரூர் 14
கிருஷ்ணகிரி 27
மதுரை 17
மயிலாடுதுறை 24
நாகப்பட்டினம் 31
நாமக்கல் 56
நீலகிரி 32
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 21
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 14
சேலம் 69
சிவகங்கை 11
தென்காசி 10
தஞ்சாவூர் 108
தேனி 6
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 63
திருவண்ணாமலை 23
திருவாரூர் 39
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 18
திருப்பூர் 110
திருச்சி 52
வேலூர் 25
விழுப்புரம் 18
விருதுநகர் 7