சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றிட காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காஞ்சிபுரம்: செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்), காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் வி.நாகராஜன், எஸ்.டி. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத்.

செங்கல்பட்டு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி., செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, கரு மாணிக்கம் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில் குமார்.

ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ.க்கள் முனிரத்தினம், துரை சந்திரசேகர் மற்றும் பஞ்சாட்சரம், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா ஜெ.அசேன், ராஜ்குமார்.

திருப்பத்தூர்: எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, மாங்குடி மற்றும் பிரபு, அஸ்லம் பாஷா, விஜய் இளஞ்செழியன், பாலவரதன்.

வேலூர்: எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், அசன் மவுலானா மற்றும் சுரேஷ்குமார், டீக்கா ராமன், தெய்வேந்திரன்.

விழுப்புரம் வடக்கு: விஷ்ணு பிரசாத் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., ரமேஷ், முருகானந்தம், ரங்க பூபதி.

விழுப்புரம் மத்தி: எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், அமிர்தராஜ் மற்றும் சீனிவாச குமார், முகமது குலாம் மொய்தீன், சிறுவை ராம மூர்த்தி.

கள்ளக்குறிச்சி: எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெய் கணேஷ், மணிரத்தினம், தனபால், சங்கராபுரம் சீனிவாசன்.

தென்காசி: எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜேஷ்குமார் மற்றும் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, எஸ்.கே.டி.பி. காமராஜ், எம்.எஸ்.காமராஜ்.

திருநெல்வேலி: எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ஆர்.கணேஷ், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமார் தனசிங், சங்கரபாண்டியன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.