டில்லி

ந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச் சம்பவங்கள் நாட்டில் எங்கெங்கு எத்தனை பதிவாகி உள்ளது என்பது குறித்த தக்வலக்ளை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.  இதில் இந்தியாவில் உள்ள 19 பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பதிவாகி உள்ளன.  இதற்கு அடுத்ததாகச் சென்னை நகரம் உள்ளது.  கோவையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளது.   சென்னையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பெண்களுக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

இதற்கு அடுத்து கேரள மாநிலம்  கொச்சி நகரில் 1 லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராகவும், மகாராஷ்டிர தலைநகர் மும்பை நகரில் 1 லட்சம் பெண்களில் 53.8 பெண்களுக்கு எதிராகவும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1 லட்சம் பெண்களில் 62.3 பேருக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இதில் அதிகபட்ச எண்ணிக்கையில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ முதல் இடத்தில் உள்ளது.  இங்குச் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராகக் குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.   ஏற்கனவே ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் குறித்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.