விஷால் தயாரித்து நடிக்கும் வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார் . மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பாபுராஜ் இதில் நடித்துள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது விரைவில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.