ஜெனிவா

லக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்கல் துயர் துடைப்பு பணிகளுக்காக ரூ.9000 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக உள்ளதாக அறிவித்ததையொட்டி  தாலிபான்கள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தொடங்கினர்.  தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது.  ஆப்கானில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் எஅன் அஞ்சப்படுகிறது.

தவிர ஆப்கானில் இருந்து வெளியேறப் பல்லாயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம் மற்றும் எல்லைப் பகுதிகளில் குவிந்துள்ளனர்.  பலர் ஆப்கான் உள்ளேயே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்   இவர்கள் அனைவருக்கும் தற்போது உணவு, குடிநீர், தங்குமிடம் தர வேண்டிய நிலைமை உள்ளது.

இதையொட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐநா சபையின் உயர்மட்ட குழுக் கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில் ஐநா மனிதாபிமான விவகார பொதுச் செயலர் மார்ட்டின் கிர்ப்பிக் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் “ஆப்கானில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா., அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இது தவிர, ஆப்கான் மக்களின் துயர் தீர்க்க, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.