டில்லி
இந்தியாவில் நேற்று 27,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,15,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,487 அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 281 அதிகரித்து மொத்தம் 4,43,528 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 37,978 பேர் குணமாகி இதுவரை 3,25,14,629 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,44,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,530 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,04,147 ஆகி உள்ளது நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,221 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,685 பேர் குணமடைந்து மொத்தம் 63,12,706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,671 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 15,876 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,06,365 ஆகி உள்ளது. இதில் நேற்று 129 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,779 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 28,654 பேர் குணமடைந்து மொத்தம் 41,84,158 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,98,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 559 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,62,967ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,529 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,034 பேர் குணமடைந்து மொத்தம் 29,09,656 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,754 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,37,010 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,217 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,537 பேர் குணமடைந்து மொத்தம் 25,85,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,125 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,31,974 ஆகி உள்ளது. நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,019 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,356 பேர் குணமடைந்து மொத்தம் 20,03,543 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.