தானே
மகாராஷ்டிராவில் எரிவாயு விலை உயர்வுக்காக மோடியைப் புகழ்ந்து சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த ஒரு நிகழ்வையும் கோபத்துடன் அணுகுவது பொதுவாகப் பலரும் மேற்கொள்ளும் ஒரு செயலாகும். ஆனால் அதற்காகச் சம்பந்தப்பட்டவரைப் புகழ்வது போல் எதிர்ப்பது மற்றொரு வகையாகும். இதை தமிழில் வஞ்சப் புகழ்ச்சி என அழைப்பார்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படியில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. ஆனால் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே மாற்றப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக மாத இடையிலும் இறுதியிலும் கூட எரிவாயு விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே மக்கல் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையொட்டி வஞ்சப் புகழ்ச்சியாக மோடியை எரிவாயு விலையை ஏற்றியதற்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் மற்றும் ஹோர்டிங்குகள் மகாராஷ்டிரா மாநிலம்க் தானே நகரில் வைக்கப்பட்டுள்ளன.