சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் “Rasavaachiye” சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]