சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுவதுடன், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் (13ந்தேதி) பொதுநிலை பட்ஜெட் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதயடுத்து, 14ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்மறையாக காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் ஒரு வாரம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆகஸ்டு 20ந்தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றுடுன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது.
இன்றைய தினம் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. அத்துடன் இன்றைய தினம் கேள்வி நேரம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகிறார். அப்போது காவல்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் அளிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கடைசி நாள் அமர்வான இன்று (13ந்தேதி), நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.