டில்லி

ந்தியாவில் நேற்று 31,372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,63,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,372 அதிகரித்து மொத்தம் 3,32,63,542 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 219 அதிகரித்து மொத்தம் 4,42,907 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,880 பேர் குணமாகி  இதுவரை 3,24,36,704 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,71,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,623 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,97,877 ஆகி உள்ளது  நேற்று 46 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,972 பேர் குணமடைந்து மொத்தம் 63,05,788 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 20,240 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 43,75431 ஆகி உள்ளது.  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,551 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,710 பேர் குணமடைந்து மொத்தம் 41,30,065 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,22,297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 803 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,61,735ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,504 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,512 பேர் குணமடைந்து மொத்தம் 29,07,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,656 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,33,839 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,168 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,512 பேர் குணமடைந்து மொத்தம் 25,82,198 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,190 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,29,985 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,998 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,226 பேர் குணமடைந்து மொத்தம் 20,00,877 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.