சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் விண்ணப்பித்துள்ளனர். 19 ஆயிரத்து 867 மாணவர்கள் நீட் தேர்வைத் தமிழில் எழுத விண்ணப்பித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளிலிருந்து 11 ஆயிரத்து 236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.