சேலம்
இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் இன்று நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதும் இந்த தேர்வில் முதல்முறையாகத் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயியான சிவகுமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்னும் 16 வயது மாணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு +2 முடித்துள்ளார். அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவராக விரும்பி நீட் தேர்வு இருமுறை எழுதி உள்ளார். ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இன்று 3ஆம் முறையாக தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டு உயிர் இழந்துள்ளார். தனது மகன் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதாக சிவகுமார் குற்றம் ஆட்டி உள்ளார். தற்போது நீட் தேர்வு குறித்து ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகையில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்:ளது.