டில்லி

னது உழைப்பின் மூலம் உருவாக்கியதை 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பாஜக 7 ஆண்டுகளில் விற்று விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

நேற்று  டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்தியத் தேசிய மாணவர் கூட்டமைப்பு தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது.  இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் கே சி வேணுகோபால், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.   இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரை ஆற்றி உள்ளார்.

ராகுல் காந்தி தனது உரையில், “முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது.  அப்போது ஊடகங்கள் மன்மோகன் சிங் ஒரு பலவீனமான பிரதமர் என விமர்சித்தன.  அதே ஊடகங்கள் பாஜக ஆட்சியில் புல்வாமா தாக்குதல் நடந்த போது மோடிக்கு எதிராக எந்த விமர்சனமும் செய்யவில்லை.

கடந்த 70 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.  கடந்த 7 ஆண்டுகளில் பாஜக முன்பு காங்கிரஸின் கடின உழைப்பால் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் விற்றுவிட்டது.  ஆனால் ஊடகங்கள் இது குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் மவுனமாக உள்ளன.

இந்தியாவின் எல்லையான லடாக் பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதைப் போன்று சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்து இருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டை அழித்துவிட்டது என்று விமர்சிப்பார்கள். ஆனால், இப்போது பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்தும் மவுனமாக இருக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்,