சென்னை: ‘டிஜிட்டல் தமிழ்நாடு’ எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு.
- டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் விரைவான கண்காணிக்கக்கூடிய அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையில் அமைந்த வெளிப்படையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மின்னாளுகையை அடிப்படையாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி அதன் மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்படும்.
- மக்களுடன் நேரடித் தொடர்புகொண்ட மற்றும் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசு துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மயமாக்கப்படும்.
- தமிழக அரசின் கொள்கை முடிவு களுக்கான ஆதரவு அமைப்பு – நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 10 கோடியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 5 கோடியும் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழக அரசு துறைகளின் அலுவலக செயல்பாடுகளை மின் மயமாக்கும் திட்டம்.
- தரவு மையக் கொள்கை உருவாக்கப்படும்.
- உலகளாவிய திறன் மையக் கொள்கை உருவாக்கப்படும்.
- மெய்நிகர் அருங்காட்சியகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் தொல்பழங்காலம் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்களை பொருள் குறித்த ஆவணங்கள் மற்றும் கோயில்களின் விபரங்களை பராமரித்து வருகிறது இவற்றின் தனிப்பயனாக்கம் உயர்தர பொறுமை ஆகியவற்றை பூர்த்தி செய்ய மேம்படுத்த மற்றும் அதிகரிக்க மெய்நிகர் அருங்காட்சியகம் மூன்று ஆண்டு காலத்திற்குள் ரூபாய் 7.5 கோடி செலவில் உருவாக்கப்படும்.
- பயனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பார்வை தளம் உருவாக்கப்படும்.
- இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
- யூமா ஜின் எனும் வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சிமாநாடு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா நகரங்களில் நடத்தப்பட உள்ளது முதலாவதாக சென்னையில் நடத்தப்படும்.
- அரிய ஒலி ஒளி ஒளிப்படம் புகைப்படங்கள் மற்றும் பிற வரலாற்று படங்களை உருவாக்கும் செய்தல் முதற்கட்டமாக ரூபாய் ஒரு கோடி செலவில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- உள்ளடக்க தமிழ் மின்நூலகம் பார்வை குறைபாடு இயக்கக் குறைபாடு கற்றல் குறைபாடு வாசிப்பு குறைபாடு கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் எளிமையாக பயன்படுத்தும் வகையில் 1 கோடி செலவில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.