சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இங்கு விவாதிக்கக்கூடாது என உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்ட்ட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் பேசியபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அங்கு நிலுவையில் உள்ளபோது, அதுபற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், எம்.எல்.ஏவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கொடநாடு சொத்து வேறு ஒருவருக்கு சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தபோதுது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் வினவினார்.
மேலும், ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமரா கழற்றப்பட்டது எப்படி, ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏன் என்று முதலமைச்சர் அடுக்கடுக்கான கேள்விக்கணை வீசினார்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,தங்களுக்கும் அந்த வழக்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று எடப்பாடி பழனிசாமி என்றார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எல்.ஏ சுதர்சனம் வழக்குகளின் உள் செல்லவில்லை என்றும், யார் மீது சந்தேகம் உள்ளது என கூறவில்லை என்றும், வழக்கை விரைந்து முடிக்கத்தான் கூறினார்.
கோடநாடு வழக்கு குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, எடப்பாடி பழனிச்சாதி பதற்றத்துடன் விவாதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது, உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.