மதுரை: விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய இந்து முன்னணியினர் வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் நாளை (10ந்தேதி) விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா அச்சம் காரணமாக, விநாயகர் சிலை பொதுஇடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச்செல்லவும் தடை வித்த்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி, மமதுரை உயர்நீதிமன்றத்தி இந்து முன்னணி கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படடது. மனுவில், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட் டிருக்கும் சூழலில் விநாயகர் சதுர்த்தி மட்டும் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மதுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு மற்றும் மனுதாரரின் வாதங்களை கேட்ட , நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கு முன்னதாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய பல வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.