நாளை விநாயகர் சதுர்த்தி..!!

ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021 வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது.

கடவுள்களுக்குள் எல்லாம் முதன்மைக் கடவுளாகப் பார்க்கப்படுபவர் விநாயகர். அனைத்துக் கோவில்களிலும் ஆசான மூர்த்தியாக அமர்ந்து தன்னை முதலில் வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு நலம் சேர்க்கும் கணபதியை அனைத்து சுப காரியங்களிலும் முதலில் வைத்து வணங்குகின்றோம். “விக்னம்” என்றால் தீர்வு என்று பொருள். எந்த ஒரு குழப்பத்தையும், பிரச்சனையையும் தீர்த்து வைப்பாராக. விநாயகர் இருப்பதால் தான் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கணபதி ஸ்லோகம்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!

விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

 தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

விநாயக சதுர்த்தி  நாளில், விரதம் இருந்து விநாயகப் பெருமானை மனதார வழிபடுவோம். நம் விக்னங்களையெல்லாம் தீர்த்தருள்வான் தொந்தி கணபதி.