சென்னை

மிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதலில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதன் பலனாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.  இதனால் ஊரடங்கில் தமிழக அரசு பல  தளர்வுகளை அறிவித்தது.    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

நேற்று தமிழகத்தில் 1,544 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,25,778 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,055 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,576 பேர் குணமடைந்து மொத்தம் 25,74,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.  அதனால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க  ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.  இன்று காலை 11.30 மணிக்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.