சென்னை

ள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார்.

கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம் மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.  இடையில் ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  இதையொட்டி ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.   அவற்றில் ஒன்றாகக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.  மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.    தற்போது பள்ளி மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இதையொட்டி இன்று தலைமைச் செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அல்லொசனிக் கூட்டம் நடத்த உள்ளார்.  இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.  கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா அதிகரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.