சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,556 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில், 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,24,234 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,036 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 25,72,942 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 16,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில தலைநகர் சென்னையில், நேற்று 169 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை சென்னையில் 5,45,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் உயிர் இழந்துள்ளதுடன், இதுவரை 8,413 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 145 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,34,973 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்:







