சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினராக முனைவர் மு.இராமசுவாமி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக, முன்னாள் திமுக எம்எல்ஏ நடிகர் வாகை சந்திரசேகரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இப்போது உறுப்பினர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், அரசு முதன்மை செயலாளர் பி.சுந்தர மோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பு விதிகளின் கூறு 8ன்கீழ் தற்போது மன்றத்தின் உறுப்பினர் – செயலராக இருந்து வரும் தி.சோமசுந்தரம் என்பவருக்கு பதிலாக, முனைவர் மு.இராமசுவாமி அவர்களை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்wத்தின் உறுப்பினர் – செயலாளராக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.