சென்னை: மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ஸ்தூபி மற்றும் ரூ.5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் , சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவினை நல இளைஞர்களுக்கு நலனுக்காக சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என்றும் மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ரூபாய் 1.80 கோடி மதிப்பில் 40 அடி உயரத்தில் கைவினை சுற்றுலா கிராமத்திற்கான பிரம்மாண்ட ஸ்தூபி அமைக்கப்படும் என்றும் கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.