வாசிங்டன்
டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்கப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தமடைந்து உள்ளதாக  ஆர்எஸ்எம் யுஎஸ் எல்எல்பி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் ஜோசப் புருசுலாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  அமெரிக்காவில், கொரோனா தொற்று  நாளொன்றுக்கு 1, 57,000 என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.  இந்த உயிரிழப்புகள்  பொருளாதார முன்னேற்றத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து பேசிய அவர்,  அமெரிக்க மக்களில் ஒரு பிரிவினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள  மறுப்பது, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்துள்ளது.   இருப்பினும் 12 வயதுக்கு மேற்பட்ட மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் 62 சதவிகிதம் இதுவரை முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்டா மாறுபாட்டின் தாக்கத்தால், மூன்றாம் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 9 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவிகிதமாக கோல்ட்மேன் சாக்ஸில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் சமீபத்தில் குறைத்துள்ளனர்.
டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் தொற்றுநோயின் நான்காவது அலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் உச்சத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றும் புருசுலாஸ் எச்சரித்துள்ளார்.