சண்டிகர்: 86வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. தள்ளாத வயதிலும் சாதனையாற்றிய முன்னாள் ஹரியானா முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் அதிகமாக உள்ள ஜாட் சமூகத்தினர் ஆதரவுடன்  இந்திய தேசிய லோக் தளம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவரது மகன் அஜய் சவுதாலா, பேரன் துஷ்யந்த் சவுதாலா போன்றோர் அரசியலில் கலக்கி வருகின்றனர். இவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார். இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், தள்ளாடும் 86 வயதிலும்,  இந்த ஆண்டு 10ம் வகுப்பு மெட்ரிக் துணை தேர்வை எழுதினார். இந்த துணைத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஓம்பிரகாண் சவுதலா தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலத்தில் 100க்கு  88 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தள்ளாத வயதிலும் சாதனை படைத்த  முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.