ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 22.05 கோடியாக உயர்துள்ளதுடன், இதுவரை 45.66 லட்சம் பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். தற்போது உருமாறிய நிலையில், தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 220,595,043 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 197,088,712ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,566,224I தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 18,940,107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105,932 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.