சென்னை: வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளையொட்டி ‘கப்பலோட்டிய தமிழன் விருது உள்பட 14 அறிவிப்புகளை தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலுரை ஆற்றுகின்றனர்.
இன்றைய கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150-வது பிறந்த நாள் விழாவினையொட்டி, ‘கப்பலோட்டிய தமிழன் விருது உள்பட 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி,
ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும். இவ்விருதுடன் ரொக்க பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை என பெயர் மாற்றப்படும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
அவரது நினைவு நாளான நவம்பர் 18ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும் உள்பட 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.