லகாபாத்

த்திய அரசு பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் உ.பி. அரசின் பசுவதைச் சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சேகர் யாதவ் அமர்வில் விசாரிக்கப்பட்டு நேற்று  தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் ஜாவித்தின் ஜாமீன் மனுவை நீதிபதி சேகர் யாதவ் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் நீதிபதி சேகர் யாதவ் , “பசு மிகவும் முக்கியமானது என்பதும், இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசு இருப்பதும் கூறப்பட்டுள்ளது இந்தியாவின் புராதனங்களான வேதங்கள், மகாபாரதம் ஆகியவற்றில் . தற்போதுள்ள சூழல்களைப் பார்க்கும் போது, பசுவைத் தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில்  பசுவுக்கு அடிப்0படை உரிமைகள் வழங்கும் மசோதாவைக் கொண்டுவர வேண்டும், பசுக்களைக் கொடுமை செய்வோரைக் கடுமையாகத் தண்டிக்கும் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்.

இந்து சமுக அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாகப் பசுப் பாதுகாப்பு என்பதைக் கொண்டுவர வேண்டும். ஒரு நாட்டில் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பலவீனமடைந்துவிட்டால் தேசம் பலவீனமடையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

கொல்வதற்கான உரிமையைவிட வாழும் உரிமை என்பது மேலானது. மாட்டு இறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது. இந்த மனுதாரர் செய்த குற்றம் முதல்முறை அல்ல,  ஏற்கனவே இவர் பசுவதை செய்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளிவந்து அதே குற்றத்தைச் செய்வார்.” எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.