டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,965 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் ஏறி இறங்கி வருகிறது. சில பகுதிகளில் 3வது அலை பரவ தொடங்கி உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். கேரளாவில் தொற்று பரவல் உச்சநிலையில் தொடர்ந்து வருகிறது. இதுவரை தொற்று பரவலை  விட குணமடைந்தோர் விகிதம் அதிகமாக இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக தொற்றில் இருந்து குணமடைவோர், பாதிப்பை விட குறைந்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (8மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி,   கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில்  33,964 தொற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும்,  460 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில்  மொத்த கொரோனா வழக்குகள்: 3,28,10,845 ஆக உயர்நதுள்ளது. தற்போது  செயலில் உள்ள வழக்குகள் 3,78,181. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து  3,19,93,644 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிசிச் பலனின்றி இதுவரை மரணத்தை தழுவியோர் எண்ணிக்கை 4,39,020 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவலை தடுக்க   65,41,13,508  பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 1,33,18,718 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நேற்று வரை (ஆகஸ்ட் 31 வரை) நாடு முழுவதும் மொத்தம் 52,31,84,293 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில், 16,06,785 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டுள்ளன என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.