டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய கொலீஜியம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தது. அதை மத்தியஅரசும், குடியரசு தலைவரும் ஏற்று ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு விழா இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தலைமைநீதிபதி என்.வி.ரமணி, புதிய நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி,
- கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா,
- குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத்,
- சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி,
- தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி,
- கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா,
- கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நீதிபதி சி.டி.ரவிக்குமார்,
- மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,
- குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம். திரிவேதி
- மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர்.