டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்2020 ஈடடி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 7 வது நாள் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இன்று காலை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் சென்றதைத் தொடர்ந்து, டிஸ்க் எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர். இதையடுத்து, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இலங்கை வீரர் ஹெராத் தங்கப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.