சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடர்ன திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறும் இவ்விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் வர மாவட்ட நிர்வாகம் நாளை முதல் 10 நாட்கள் தடை போட்டுள்ளது.
ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்டு 27ந்தேதி முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.