சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில்,  மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள  மொத்த விலைக்கடைகளில் மாநகராட்சி நடத்திய சோதனையில், பாரிமுனையில் நடத்திய சோதனையில்  30 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாக்டிக் தடை அமலில் உள்ளது. அதன்படி,  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்தாலோ, தயாரித்தாலோ ரூ.100 முதல் ரூ.1லடசம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது கொரோனா காலங்களில் அரசு அறிவித்த ஊரடங்குகளால்  கண்டுகொள்ளாமல் இருந்ததால், மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நடமாட்டம் தீவிரமாக காணப்பட்டது.

இதையடுத்து, பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்துவதில் சென்னை மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் உபயோகம் குறித்து, சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில்  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் உதவியுடன் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 30 டன்களுக்கு மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கண்ணாமூச்சியா – கண்டிப்பா? சென்னையில் 23ந்தேதி முதல் மீண்டும் கடுமையாகிறது பிளாஸ்டிக் தடை…