திருச்செந்தூர்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று  தொடங்கியது.

அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது,  இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஜூலை 3ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழ் அர்ச்சனை செய்ய விருக்கும் ஆட்சியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதல்நிலை கோயில்களின் அர்ச்சகர்கள் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, இந்த  திட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் அன்புமணி முன்னிலையில் அர்ச்சகர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்தனர்.